ரூ.86 லட்சத்தில் புதிய போலீஸ் நிலையம்

மயிலாடுதுறை அருகே பெரம்பூரில் ரூ. 86 லட்சத்தில் புதிய போலீஸ் நிலையத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா திறந்து வைத்தார்.

Update: 2023-06-06 18:45 GMT

குத்தாலம்:

மயிலாடுதுறை அருகே பெரம்பூரில் ரூ. 86 லட்சத்தில் புதிய போலீஸ் நிலையத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா திறந்து வைத்தார்.

புதிய போலீஸ் நிலையம்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காவல் உட்கோட்டத்துக்கு உட்பட்ட பெரம்பூர் போலீஸ் நிலையம் ஏற்கனவே இயங்கி வந்த பழைய கட்டிடம் சேதமடைந்ததை தொடர்ந்து அதனை மாற்ற முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து காவல் நிலையம் கடந்த 4 வருடங்களாக போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் தற்காலிகமாக இயங்கி வந்தது.

இதை தொடர்ந்து ஏற்கனவே இருந்த போலீஸ் நிலையம் அருகிலேயே 3077 சதுர அடி பரப்பளவில் ரூ.86 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக போலீஸ் நிலையம் கட்டப்பட்டது.

திறப்பு விழா

இந்த கட்டிடத்தை சென்னையில் இருந்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு காணொலி வாயிலாக இன்று திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா குத்துவிளக்கு ஏற்றி பெரம்பூர் புதிய போலீஸ் நிலையத்தை பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா முருகன், மாவட்ட குழு தலைவர் உமாமகேஸ்வரி சங்கர், ஏ.டி.எஸ்.பி வேணுகோபால், டி.எஸ்.பிக்கள் கலைக்கதிரவன், சஞ்சீவ்குமார், தி.மு.க. குத்தாலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மங்கைசங்கர், பெரம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஷ் கண்ணா மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்