திருத்தணியில் தண்ணீர் தேடி ஊருக்குள் விலங்குகள் வருவதை தடுக்க புதிய திட்டம்

திருத்தணி வனசரகத்தில் தண்ணீர் தேடி ஊருக்குள் வன விலங்குகள் வருவதை தடுக்க நேடுஞ்சாலையை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு பள்ளம் வனதுறையினரால் தொண்டப்பட்டுள்ளது.

Update: 2023-03-31 11:58 GMT

தண்ணீர் தேடி ஊருக்குள் வரும் விலங்குகள்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வனசரகத்தில் சுமார் 5 ஆயிரம் ஹெக்டேர்ஸ் பரப்பளவில் காப்புக்காடுகள் உள்ளன. இங்கு மயில், மான், குரங்கு, காட்டுப்பன்றி, முயல் உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள் உள்ளன. கோடை காலத்தில் வனப் பகுதியில் போதிய மழையின்றி வறட்சி ஏற்படும். அப்போது இயற்கை நீருற்று மற்றும் குட்டைகள் வறண்டு, விலங்குகள் நீருக்காக அருகிலுள்ள கிராமங்களுக்கு படையெடுத்து விவசாயிகள் பயிரிட்டுள்ள நெல், வேர்க்கடலை, தர்பூசணி, உளுந்து உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்கின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக வரும் காட்டுப்பன்றிகள், முயல்கள், மான்கள், நரிகள் புகுந்து பயிர்களை நாசம் செய்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.

மழைநீர் சேகரிப்பு பள்ளம்

இதனை தடுக்கும் வகையில் நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பீரகுப்பம், எஸ்.வி.ஜி.புரம், வி.சி.ஆர்.கண்டிகை, வி.கே.ஆர்.புரம் உள்ளிட்ட பகுதிகளில் விலங்குகள் வனப்பகுதியில் இருந்து வருவதை தடுக்க 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மழைநீர் சேகரிப்பு பள்ளம் வனத்துறையினர் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து திருத்தணி வனச்சரகர் அருள்நாதன் தெரிவித்ததாவது:- கோடை காலங்களில் வனவிலங்குகள் குடிநீருக்காக அருகில் உள்ள கிராமங்களுக்குள் வருவதை தடுக்க நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் மழைநீர் சேகரிப்பு பள்ளம் நபார்டு திட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வனப்பகுதியை ஒட்டியுள்ள நெடுஞ்சாலையில் வாகனங்கள் மோதி வனவிலங்குகள் உயிரிழப்பது தடுக்கப்படும் என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்