புதிய மக்கள் தமிழ் தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் புதிய மக்கள் தமிழ் தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-08-18 19:33 GMT

நெல்லை வண்ணார்பேட்டை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் நேற்று புதிய மக்கள் தமிழ் தேசம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் நடைபெறும் தொடர் கொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும். யாதவ சமுதாய மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும., ஏற்கனவே கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்துக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சி தலைவர் செந்தூர் மகாராஜன் தலைமை தாங்கினார். அகில இந்திய அழகுமுத்துகோன் மக்கள் கட்சி நிறுவன தலைவர் சுப.சிவபெருமாள் மற்றும் பல்வேறு யாதவ அமைப்பு நிர்வாகிகள் தாமோதரன், முத்துமாலை, உடையார்பட்டி ஆறுமுகம், கண்ணன், ராஜேந்திரன், மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து சுப.சிவபெருமாள் கூறுகையில், 'தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு கொலை சம்பவங்கள் அதிகரித்து உள்ளது. அதனை அரசு தீவிர நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்த வேண்டும். யாதவ சமுதாயத்தினர் ஆதிக்க சக்திகளால் கொலை செய்யப்பட்டு உள்ளனர். அவர்களது குடும்பத்துக்கு இதுவரை நிதி வழங்கப்படவில்லை. மற்ற சமூகத்தினருக்கு உடனடியாக நிதி மற்றும் அரசு வேலை வழங்கப்படுகிறது. எனவே உடனடியாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அதிகாரிகள் உறுதி அளித்தபடி நிவாரண உதவி, அரசு வேலை வழங்க வேண்டும்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்