ரூ.20 லட்சத்தில் புதிய ஊராட்சி அலுவலகம்

ரூ.20 லட்சத்தில் புதிய ஊராட்சி அலுவலகம் கட்டுமான பணி தொடங்கியது.

Update: 2023-01-22 19:00 GMT

நாகை மாவட்டம் வாய்மேடு அருகே உள்ள பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி ஊராட்சியில் ரூ.20 லட்சத்தில் புதிய ஊராட்சி அலுவலகம் கட்டும் பணிக்கு பூமிபூஜை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார். முன்னதாக ஊராட்சி மன்ற தலைவர் சத்ய கலா செந்தில்குமார் வரவேற்றார். ஒன்றியக்குழு தலைவர் கமலா அன்பழகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜூ, பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் பிரித்திவிராஜ், கூட்டுறவு சங்க இயக்குனர் உதயம் முருகையன், மாவட்ட கவுன்சிலர் சுப்பையன், ஊராட்சி மன்ற தலைவர்கள் தேவி செந்தில், தமிழரசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அங்கு மரக்கன்றுகள் நடப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்