பி.எஸ்.என்.எல்.வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகள் அதிகாரி தகவல்

பி.எஸ்.என்.எல்.வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாாி தொிவித்துள்ளாா்.

Update: 2022-09-30 18:45 GMT

இந்திய அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். தனது நிறுவன தினத்தை கொண்டாடும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க உள்ளது. அதன்படி ரூ.599, ரூ.799, ரூ.999 மற்றும் ரூ.1,499 திட்டங்களில் ஆறு மாதம் அல்லது ஒரு வருட சந்தா செலுத்தி புதிய பாரத் பைபர் எப்.டி.டி.ஹெச் இணைப்பு பெறும் வாடிக்கையாளர்களுக்கு சிங்கிள் பேண்ட் அல்லது டபுள் பேண்ட் வை-பை மோடம் கூடுதல் கட்டணமின்றி தொகுப்பாக வழங்கப்படும்.

வாடிக்கையாளர்கள் இச்சலுகையை பயன்படுத்தி இணைப்புகளை பெற்று பயன்பெற அருகில் உள்ள பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் சேவை மையம் மற்றும் பி.எஸ்.என்.எல். பாரத் பைபர் எப்.டி.டி.ஹெச் முகவர்களை அணுகலாம். இந்த சலுகை இன்று (சனிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.

மேற்கண்ட தகவல் பி.எஸ்.என்.எல். கடலூர் முதன்மை பொது மேலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்