அ.தி.மு.க.வினருக்கு புதிய உறுப்பினர் அட்டை

அ.தி.மு.க.வினருக்கு புதிய உறுப்பினர் அட்டை

Update: 2023-03-17 18:35 GMT

சிவகாசி,

விருதுநகர் மேற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அ.தி.மு.க.வினருக்கு கட்சியின் தலைமை சார்பில் புதிய உறுப்பினர் அட்டை தயார் செய்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை முன்னாள் அமைச்சரும், கட்சியின் அமைப்பு செயலாளருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி சம்பந்தப்பட்ட நிர்வாகிகளிடம் நேரில் வழங்கினார்.

சிவகாசியில் உள்ள மேற்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய செயலாளர்கள் விஸ்வநத்தம் ஆரோக்கியம், லயன் லட்சுமிநாராயணன், புதுப்பட்டி கருப்பசாமி, வெங்கடேசன், சிவகாசி பகுதி செயலாளர்கள் சாம்ராஜா, சரவணக்குமார், தொகுதி கருப்பசாமிபாண்டியன், கிருஷ்ணமூர்த்தி, விருதுநகர் நகர செயலாளர் நயினார்முகம்மது, ஒன்றிய செயலாளர்கள் மச்சராஜா, கண்ணன், தர்மலிங்கம் ஆகியோர் பெற்றுக்கொண்ட னர். புதிய உறுப்பினர் அட்டையில் அ.தி.மு.க. இடைக்கால பொது செயலாளர் எடப்பாடிபழனிசாமியின் புகைப்படம் மற்றும் கையெழுத்து இடம்பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்