ஊராட்சி ஒன்றியங்களுக்கு சொந்தமான கண்மாய்களில் புதிய மடைகள்
ஊராட்சி ஒன்றியங்களுக்கு சொந்தமான கண்மாய்களில் புதிய மடைகள் கட்டுத்தரப்படும்
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ், சிவகங்கை மாவட்டத்திலுள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில், ஊராட்சி ஒன்றியங்களுக்கு சொந்தமான சிறுபாசன கண்மாய்களில் உள்ள பழுதடைந்த மடைகள் மற்றும் கழுங்குகளுக்கு பதிலாக, தேவையின் அடிப்படையில் புதிய மடைகள் மற்றும் கழுங்குகள் கட்டித்தரப்பட உள்ளதால், சம்பந்தபட்ட ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த விவசாயிகள் அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.