வாக்குப்பதிவுக்கு தேவையான 900 புதிய எந்திரங்கள் வந்தன

நாமக்கல்லுக்கு நேற்று வாக்குப்பதிவுக்கு தேவையான 900 புதிய எந்திரங்கள் வரப்பெற்றன. இவை பாதுகாப்பாக வைக்கப்படுவதை கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2023-04-30 18:45 GMT

புதிய கருவிகள் வருகை

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி நாமக்கல் மாவட்டத்திற்கு பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் பெங்களூருவில் இருந்து 320 புதிய கட்டுப்பாட்டு எந்திரங்கள் மற்றும் 580 புதிய வாக்களர்கள் சரி பார்க்கும் காகித தணிக்கை சோதனை கருவிகள் (விவிபேட்) ஆகியன அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

இவை நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு பாதுகாப்பறையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டது. இப்பணியை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

4,214 வாக்குப்பதிவு எந்திரங்கள்

ஏற்கனவே இந்த மின்னணு பாதுகாப்பறையில் 4,214 வாக்குப்பதிவு எந்திரங்கள், 2,622 கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் 970 வாக்களர்கள் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை கருவிகள் ஆகியவை உரிய பாதுகாப்புடன் இருப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வின் போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் மற்றும் தேர்தல் பிரிவு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்