புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை..!

கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மீனவர்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2022-11-18 05:16 GMT

கோப்புப்படம் 

கடலூர்,

தென் கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்றும் நாளையும் மிதமான மழை ,20 ஆம் தேதி கனமழை ,வட தமிழகத்தில் வரும் 21,22 ஆம் தேதிகளில் மிககனமழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், கடலில் உள்ள தங்கு படகுகள் அனைத்தும் துறைமுகங்களுக்கு திரும்ப வேண்டும் என, கடலூரில் மீன்வளத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்றும், படகு, மீன்பிடி வலை உள்ளிட்டவற்றை பாதுகாப்பாக வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

 

Tags:    

மேலும் செய்திகள்