அரபிக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.;

Update: 2023-11-08 03:37 GMT

Image Courtesy: PTI (File Photo)

சென்னை,

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியின் மேல் நிலவி வந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது.

இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஒருசில இடங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும். தெற்கு கர்நாடக மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனிடையே, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்