புதிய நூலக கட்டுமான பணி

அருப்புக்கோட்டையில் புதிய நூலக கட்டுமான பணி தொடங்கப்பட்டது.

Update: 2022-07-31 19:47 GMT

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை நெசவாளர் காலனியில் போட்டி தேர்வர்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 88 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு முதற்கட்டமாக அறிவுசார் மையத்திற்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அறிவுசார் மையத்தின் கட்டுமான பணிகள் குறித்தும் அதன் அமைப்பு குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியின் போது அப்பகுதி பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அமைச்சரிடம் வழங்கினர்.

இதில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சுப்பாராஜ், மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ரமேஷ், முன்னாள் நகர்மன்றத்தலைவர் சிவப்பிரகாசம், நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி, துணைத்தலைவர் பழனிச்சாமி ஆணையாளர் அசோக்குமார், தி.மு.க. நகர செயலாளர் மணி, ஒன்றிய செயலாளர் பாலகணேஷ், இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாபு, தி.மு.க. பிரமுகர்கள் சிவசங்கரன், டேனியல், நகர்மன்ற உறுப்பினர்கள் நாகநாதன், ஜோதி முத்துராமலிங்கம், கோகுல், இளங்கோ, டுவிங்கிளின் ஞானபிரபா, வருவாய்த்துறை அதிகாரிகள், தி.மு.க. நிர்வாகி டேனியல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்