ரூ.1 கோடியே 32 லட்சம் மதிப்பில் புதிய நூலக கட்டிடம்

சீர்காழியில் பிறந்த நூலக தந்தை அரங்கநாதன் பெயரில் ரூ.1 கோடியே 32 லட்சம் மதிப்பில் புதிய நூலக கட்டிடத்துக்கு பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.

Update: 2022-08-17 17:22 GMT

சீர்காழி;

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பிறந்து வளர்ந்த நூலக தந்தை அரங்கநாதன் பெயரில் சீர்காழியில் புதிதாக நூலக கட்டிடம் அமைத்து தர வேண்டுமென சீர்காழி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடந்த பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் நூலக தந்தை அரங்கநாதன் பெயரில் புதிய நூலக கட்டிடம் கட்டுவதற்கு தமிழக அரசு ரூ.1 கோடியே 32 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதனைத்தொடர்ந்து சீர்காழி வாய்க்காங்கரை தெருவில் புதிய நூலக கட்டிடம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டு விழா நடந்தது.விழாவிற்கு பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.சீர்காழி நகர்மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன், துணை தலைவர் சுப்பராயன், தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுப்பணித்துறை கட்டிட பிரிவு உதவி செயற்பொறியாளர் நாதவேலு வரவேற்று பேசினார்.விழாவில் மாவட்ட நூலகர் ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளர் ஜாண்டி ரோஸ், நூலக வாசகர் வட்ட நிர்வாகிகள் வீரசேணன், பாலவேலாயுதம், கோவி.நடராஜன், முத்துக்குமார், சுந்தரய்யா, அன்பழகன், நகர்மன்ற உறுப்பினர் ராமு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒப்பந்தக்காரர் அன்பழகன் நன்றி கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்