சுற்றுலா தொழில் முனைவோருக்கு புதிய வழிகாட்டி நெறிமுறைகள்
சுற்றுலா தொழில் முனைவோருக்கு புதிய வழிகாட்டி நெறிமுறைகள்
திருப்பூர்
தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய பல்வேறு சுற்றுலா தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை இந்த ஆண்டு உலக சுற்றுலா தினத்தன்று, 1.Home Stay, Bed -amp; Breakfast, 2.Adventure Tourism, 3.Camp Site, 4.Caravan Tourism ஆகிய 4 புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டது. இதுதொடர்பான விவரங்களை www.tntourismtors.com என்ற இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
புதிதாக இந்த திட்டத்தில் இணைய விருப்பம் உள்ளவர்கள் அனைத்து தகவல்கள், சான்றிதழ்கள், சமர்ப்பித்து திட்டத்துக்கான ஆய்வு கட்டணம் அனைத்தும் இந்த இணையதளத்தின் மூலமாக அறிந்து கொள்ளலாம். திட்டத்தில் 3 மாத காலத்துக்குள் அனைவரும் பதிவை மேற்கொள்ள வேண்டும். பதிவை தொடர்ந்து தமிழக சுற்றுலாத்துறையால் நியமனம் செய்யப்பட்டுள்ள முகவர்கள் நேரில் வந்து ஆய்வு பணியை மேற்கொள்வார்கள்.
அப்போது அவர்கள் கேட்கும் ஆவணங்களை அவர்களிடம் காண்பிக்கலாம். இந்த திட்டத்தில் இணைவதற்கு தொடர்புடைய அரசு துறைகளிடம் இருந்து மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம், கிராம ஊராட்சி நிர்வாகம் மூலமாக முறையாக அனுமதி பெற்றிருக்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில் முனைவோர் அனைவரும் இந்த சுற்றுலா திட்டங்களில் இணைந்து பயன்பெறலாம் என்று கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
----