நேபாளத்தை சேர்ந்த புதுப்பெண் தற்கொலை
குடும்ப பிரச்சினை காரணமாக, நேபாளத்தை சேர்ந்த புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
நேபாளத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 25). அவருடைய மனைவி சுனிதா (20). இவர்கள் 2 பேரும், திண்டுக்கல் கோவிந்தாபுரம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்தனர். பிரகாஷ் அப்பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சமையல் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த சுனிதா, நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சுனிதாவுக்கு திருமணமாகி 8 மாதங்களே ஆவதால், ஆர்.டி.ஓ. கமலக்கண்ணன் விசாரணை நடத்தி வருகிறார்.