காதல் திருமணம் செய்த 4 நாட்களில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

சங்கரன்கோவிலில் காதல் திருமணம் செய்த 4 நாட்களில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

Update: 2022-09-10 16:40 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவிலில் காதல் திருமணம் செய்த 4 நாளில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

காதல் திருமணம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காந்தி நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் கருத்தப்பாண்டி மகள் கவுசல்யா (வயது 22). அதே பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (25). மெக்கானிக் வேலை பார்த்து வருகிறார்.

கார்த்திக், கவுசல்யா ஆகியோர் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இவர்கள் கடந்த 7-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில் நேற்று காலையில் கார்த்திக் வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டார். இரவில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, கவுசல்யா மின்விசிறியில் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திக் உடனடியாக கவுசல்யாவை மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே கவுசல்யா பரிதாபமாக இறந்துவிட்டார்.

உதவி கலெக்டர் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த சங்கரன்கோவில் போலீசார், கவுசல்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமணமாகி 4 நாட்களே ஆவதால் சங்கரன்கோவில் உதவி கலெக்டர் சுப்புலட்சுமி விசாரணை நடத்தி வருகிறார்.

சங்கரன்கோவிலில் காதல் திருமணம் செய்த 4 நாட்களில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

-------

Tags:    

மேலும் செய்திகள்