வால்பாறை தீயணைப்பு நிலையத்திற்கு நவீன வசதிகளுடன் புதிய தீயணைப்பு வாகனம்

வால்பாறை தீயணைப்பு நிலையத்திற்கு நவீன வசதிகளுடன் புதிய தீயணைப்பு வாகனம்

Update: 2023-03-16 18:45 GMT

வால்பாறை

வால்பாறையில் தீயணைப்பு நிலையம் தொடங்கிய போது வேறு ஒரு தீயணைப்பு நிலையத்தில் இயங்கி வந்த பழைய பெரியளவிலான தீயணைப்பு வாகனம் வழங்கப்பட்டது. ஆனால் வால்பாறை பகுதியில் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை கோடைக்காலத்தில் எஸ்டேட் பகுதிகளில் தீவிபத்து ஏற்படுவது வழக்கம். இந்த சமயத்தில் இந்த பெரிய வகை தீயணைப்பு வாகனம் எஸ்டேட் பகுதியில் உள்ள சிறிய சாலைகளில் செல்ல முடியாத நிலை இருந்து வந்தது. இதனால் பல எஸ்டேட் பகுதியில் தீவிபத்து ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு வாகனம் செல்லமுடியாமல் பலத்த சேதம் ஏற்பட்டது. இது குறித்து தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வால்பாறை பகுதிக்கு எஸ்டேட் பகுதியில் உள்ள சிறிய சாலைகளில் தீவிபத்து ஏற்படும் போது எளிதாக செல்லக்கூடிய புதிய நவீன தீயணைப்பு வாகனம் வழங்க வேண்டும் என்று வால்பாறை பகுதி பொது மக்கள் எஸ்டேட் பகுதி மக்கள், எஸ்டேட் நிறுவனங்கள் கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து வால்பாறை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் தீயணைப்பு நிலையத்திற்கு நவீன சிறிய ரக தீயணைப்பு வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்