புதிய செயல் அலுவலர் பொறுப்பேற்பு
அரங்கநாதர் கோவில் புதிய செயல் அலுவலர் பொறுப்பேற்பு;
ரிஷிவந்தியம்
ரிஷிவந்தியம் ஒன்றியத்துக்குட்பட்ட ஆதிதிருவரங்கத்தில் பழமை வாய்ந்த ரங்கநாயகி தாயார் சமேத அரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில் கீழையூர் வீரட்டனேஸ்வரர் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள குழுக்கோவில்களில் இருந்து வந்தது. இந்த நிலையில் அரங்கநாத பெருமாள் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மற்றும் உண்டியல் காணிக்கை தொகையும் அதிகரித்தது. கோவில் வருமானத்தை கருத்தில் கொண்டு அரங்கநாத பெருமாள் கோவில் தரம் உயர்த்தப்பட்டு, இக்கோவிலுக்கென புதிய செயல் அலுவலர்(நிலை-3) பதவி இடம் ஏற்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து புதிய செயல் அலுவலராக நியமனம் செய்யப்பட்ட பாக்கியராஜ் கோவிலில் பொறுப்பேற்றுக்கொண்டார்.