புதிய செயல் அலுவலர் பொறுப்பேற்பு
வெட்டுவானம் எல்லையம்மன் கோவில் புதிய செயல் அலுவலர் பொறுப்பேற்றார்.
பள்ளிகொண்டாவை அடுத்து வெட்டுவானம் எல்லையம்மன் கோவில் செயல் அலுவலராக இருந்த ராதாமணி பதவி உயர்வு பெற்று தர்மபுரி மாவட்டத்திற்கு மாறுதலாகி சென்றார். அவருக்கு பதில் தர்மபுரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதி இந்து சமய அறநிலையத்துறை சரக ஆய்வாளராக பணியாற்றி வந்த நரசிம்மமூர்த்தி வெட்டுவானம் எல்லையம்மன் கோவில் செயல் அலுவலராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு கோவில் ஊழியர்கள், நிர்வாகிகள், அறங்காவல் குழு தலைவர்கள், உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.