புதிய மின் இணைப்பு விரைந்து வழங்க வேண்டும்
புதிய மின் இணைப்பு விரைந்து வழங்க வேண்டும் என நுகர்வோர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி ஆவின் வளாகத்தில் உள்ள மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. இதற்கு நீலகிரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் வில்வராஜ் தலைமை தாங்கினார். இதில் கமர்சியல் சாலை, லேக்வியூ, எட்டின்ஸ் சாலை, தமிழகம், ஆஸ்பத்திரி சாலை, தலைக்குந்தா, தும்மனட்டி, தேனாடுகம்பை, பைக்காரா, எம்.பாலாடா, மற்றும் எல்லநள்ளி பிரிவு அலுவலகத்தை சார்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு மின்வாரியம் சம்பந்தமான குறைகளை நேரில் தெரிவித்தனர். குறிப்பாக மின் இணைப்பில் பெயர் மாற்றம், புதிய மின் இணைப்பு உள்ளிட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதில் செயற்பொறியாளர் (பொது) ரமேஷ், மின்வாரிய அதிகாரி சிவக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.