பட்டிவீரன்பட்டியில் புதிய குடிநீர் இணைப்புகள் வழங்க நடவடிக்கை; பேரூராட்சி கூட்டத்தில் அறிவிப்பு

பட்டிவீரன்பட்டியில் புதிய குடிநீர் இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரூராட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

Update: 2023-04-28 21:00 GMT

பட்டிவீரன்பட்டி பேரூராட்சி கூட்டம், பேரூராட்சி தலைவர் சியாமளா தலைமையில் நேற்று நடைபெற்றது. துணைத்தலைவர் கல்பனாதேவி அருண்குமார் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் உமாசுந்தரி வரவேற்றார். இதில், அனைத்து கவுன்சிலர்களும் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில், பட்டிவீரன்பட்டி பேரூராட்சி பகுதியில் புதிதாக குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு ஜூன் மாதத்தில் புதிய குடிநீர் இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராமகிருஷ்ணாபுரத்தில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தல், 1-வது வார்டில் புதிதாக சாக்கடை கால்வாய் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்