கள்ளக்குறிச்சியில் பா.ஜ.க.வினர் நூதன ஆர்ப்பாட்டம்

பொங்கல் பரிசுடன் கரும்பு, வெல்லம் வழங்கக்கோரி கள்ளக்குறிச்சியில் பா.ஜ.க.வினர் நூதன ஆர்ப்பாட்டம்

Update: 2022-12-26 18:45 GMT

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ஜ.க. விவசாய அணி சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட விவசாய அணி தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கினார். இ்தில் கலந்துகொண்டவர்கள் கையில் கரும்புகளுடனும், கழுத்தில் தேங்காயை மாலையாக கட்டிப்போட்டும் இருந்தனர்.

தமிழக அரசு வருடந்தோறும் விவசாயிகளிடம் இருந்து செங்கரும்பு கொள்முதல் செய்து பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுதொகையுடன் கரும்பு வழங்கி வந்தது. இதனால் இந்த ஆண்டும் அரசு கொள்முதல் செய்யும் என நினைத்து விவசாயிகள் செங்கரும்பு சாகுபடி செய்தனர். ஆனால் பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிக்காததால் செங்கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். எனவே பொங்கலுக்கு பரிசுதொகையுடன் கரும்பு, தேங்காய் மற்றும் வெல்லம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி் கோஷம் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில விவசாய அணி செயலாளர் விஜயகுமார், மாநில ஓ.பி.சி. அணி செயலாளர் வக்கீல்.செல்வநாயகம், மாவட்ட பொதுச் செயலாளர் தியாகராஜன், துணை தலைவர் ராஜேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் பாலசுந்தரம் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்