பழங்குடியின மாணவர்களுக்கு புத்தாடைகள்

கூடலுர் அருகே பழங்குடியின மாணவர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது.

Update: 2022-08-14 13:45 GMT

கூடலூர், 

கூடலூர் அருகே கக்குண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி, பழங்குடியின மாணவர்கள் புத்தாடை அணிந்து பள்ளிக்கு வரும் வகையில் புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆசிரியர்கள் சார்பில், பழங்குடியின மாணவர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது. முன்னதாக மாணவர்களுக்கு தொண்டு நிறுவனம் மூலம் குடைகளும் வழங்கப்பட்டது. இதில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் கே.எம்.பீனா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பிஜீஷ், அங்கன்வாடி ஆசிரியை சரிதா கோபி ஆகியோர் மாணவர்களுக்கு புத்தாடைகள் வழங்கினர். நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் பால் விக்டர் தலைமை தாங்கினார். முன்னதாக ஆசிரியர்கள் ராஜஸ்ரீ வரவேற்றார். ஏலியாஸ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்