புதிய வகுப்பறை கட்டிடங்கள்

கோட்டூர் அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடங்களை ஓ.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

Update: 2023-08-06 19:45 GMT

தேனி அருகே உள்ள கோட்டூர் அரசு தொடக்கப்பள்ளியில் போடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 2 புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டன. இதன் திறப்பு விழா நடந்தது. முன்னாள் முதல்-அமைச்சரும், போடி எம்.எல்.ஏ.வுமான ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு புதிய வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தார். அதுபோல், தாடிச்சேரி, மாரியம்மன் கோவில்பட்டி ஆகிய இடங்களில் புதிதாக அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடைகளை ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட ஊராட்சி தலைவர் பிரித்தா நடேஷ், ஓ.பன்னீர்செல்வம் அணியின் மாவட்ட செயலாளர் சையது கான், தேனி மேற்கு ஒன்றிய செயலாளர் முத்துபாலாஜி, தேனி நகர செயலாளர் ரெங்கநாதன், துணைச்செயலாளர் மயில்வேல், ஆண்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் இளையராஜா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்