பூலாங்குளம் அரசு பள்ளியில் ரூ.1.57 கோடியில் புதிய வகுப்பறை கட்டிடம்- மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. தகவல்

பூலாங்குளம் அரசு பள்ளியில் ரூ.1.57 கோடியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட உள்ளதாக மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. கூறினார்.

Update: 2023-10-09 19:32 GMT

இட்டமொழி:

மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:- ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள பொதுமக்களின் 10 முக்கிய கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி வந்தேன். எனது கோரிக்கையை ஏற்று தமிழக முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூலாங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.57 கோடி மதிப்பில் புதிய 20 வகுப்பறை கட்டிடங்கள் கட்டவும், நெட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.2.02 கோடி மதிப்பில் 20 வகுப்பறை கட்டிடங்கள் கட்டவும், ஆலங்குளம் பகுதியை மையமாக வைத்து புதிய வட்டார போக்குவரத்து கழகம் அமைப்பதற்கு ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட பணிகள் மிக விரைவில் தொடங்க உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்