புதிய வகுப்பறை கட்டிடம்
ரிஷிவந்தியம் உருது பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடத்தை வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய உருது தொடக்கப் பள்ளியில் ரூ.25½ லட்சம் செலவில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதனை ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பெருமாள் துரைமுருகன், பாரதிதாசன், ஒன்றியக்குழு தலைவர் வடிவுக்கரசி சாமிசுப்பிரமணியன், துணை தலைவர் சென்னம்மாள் அண்ணாதுரை, ஊராட்சி மன்ற தலைவர் வினிதா மகேந்திரன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் செல்வகுமார், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.