மூவலூர் மார்க்க சகாய சாமி கோவிலுக்குரூ.50 லட்சத்தில் புதிய தேர்
மூவலூர் மார்க்க சகாய சாமி கோவிலுக்குரூ.50 லட்சத்தில் புதிய தேர் செய்வதற்கான பணிகள் தொடங்கியது.
மயிலாடுதுறை அருகே மூவலூரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மார்க்க சகாயசாமி கோவிலில் இருந்த தேர் சேதமடைந்துவிட்டது. இதையடுத்து புதிய தேர் செய்து தேரோட்டம் நடத்த வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையேற்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை புதிய தேர் செய்வதற்காக ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இதனைத் தொடர்ந்து நேற்று புதிய தேர் செய்வதற்கான பணி சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. நிகழ்ச்சிக்கு கோவில் செயல் அலுவலர் அன்பரசன் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க.மேற்கு ஒன்றிய செயலாளரும், முன்னாள் ஒன்றியக்குழு தலைவருமான மூவலூர் மூர்த்தி கலந்து கொண்டு புதிய தேர் செய்வதற்கான பணியை தொடங்கி வைத்தார். விழாவில் ஒன்றிய குழு தலைவி காமாட்சிமூர்த்தி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பக்தர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.