சென்னை மெட்ரோ ரெயிலில் வரப்போகும் புதிய மாற்றம்...

விடுமுறை நாட்களில் மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது.

Update: 2023-02-25 08:47 GMT

சென்னை,

சென்னை மெட்ரோ ரயில் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 2 முதல் இரண்டரை லட்சம் பயணிகள் பயணிக்கும் நிலையில், விடுமுறை நாட்களில் உச்ச நேரங்களில் மெட்ரோவில் கூட்டம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில் கட்டம்-1, ரயில்களில் குளிர்சாதன பெட்டிகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே சென்னை மெட்ரோ ரயிலில் 3 பொது பெட்டிகளும், 1 மகளிர் பெட்டியும் இருக்கும் நிலையில் அத்துடன் 2 பெட்டிகளை இணைத்து 6 பெட்டிகளாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்