நகராட்சி தொடக்கப்பள்ளிக்கு ரூ.25 லட்சத்தில் புதிய கட்டிடம்

நகராட்சி தொடக்கப்பள்ளிக்கு ரூ.25 லட்சத்தில் புதிய கட்டிடம்;

Update:2023-04-20 00:15 IST

திருவாரூர் ஐநூற்று பிள்ளையார் கோவில் தெருவில் கே.டி.ஆர். நகராட்சி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் மாணவர்களின் வசதிக்காக ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறை, கழிவறை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் திருவாரூர் நகரசபை தலைவர் புவனபிரியா செந்தில் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து, பள்ளியில் புதிதாக சேர்ந்த 12 மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகள் மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கினார். ஆண்டு முழுவதும் தொடர்ந்து விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகளையும் வழங்கினார். நிகழ்ச்சியில் தி.மு.க. நகர செயலாளர் வாரை.பிரகாஷ், நகராட்சி ஆணையர் பிரபாகரன், நகர மன்ற உறுப்பினர் கோமதி தியாகராஜன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்