அரசு ஆஸ்பத்திரியில் புதிய கட்டிடம்

நன்னிலம் அரசு ஆஸ்பத்திரியில் புதிய கட்டிடத்தை காமராஜ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.;

Update:2023-10-15 00:15 IST

நன்னிலம்:

நன்னிலம் அரசு ஆஸ்பத்திரியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.25 லட்சம் மதிப்பில் புதிதாக கொரோனா சிறப்பு வார்டு கட்டிடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நடந்தது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார்.இதில் முன்னாள் எம்.பி. கோபால், இணை இயக்குனர் டாக்டர் சிவக்குமார், தலைமை டாக்டர் ரேணுகா, டாக்டர்கள் வினோத் குமார், சக்ரவர்த்தி மற்றும் நன்னிலம் தெற்கு ஒன்றிய செயலாளர் ராம.குணசேகரன், ஒன்றிய துணைத் தலைவர் சி.பி.ஜி.அன்பு, முன்னாள் ஒன்றிய தலைவர் சம்பத், நன்னிலம் நகர அ.தி.மு.க. செயலாளர் பக்கிரிசாமி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்