திருமணமான 4 நாளில் புதுப்பெண் மாயம்

திருமணமான 4 நாளில் புதுப்பெண் மாயமானார்.

Update: 2023-02-17 20:43 GMT

சிவகாசி, 

கரூர் மாவட்டம் பசுபதிபாளையத்தை சேர்ந்தவர் விக்னேசுவரன் (வயது 36). இவருக்கும் சிவகாசியை சேர்ந்த தேவி என்பவருக்கும் சமீபத்தில் கரூர் வெண்ணைமலை முருகன் கோவிலில் வைத்து திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்தவுடன் புதுமண தம்பதிகள் சிவகாசி வந்தனர். இங்கு நாகலட்சுமி என்பவரின் வீட்டில் தங்கி இருந்தனர். திருமணம் முடிந்த 4-வது நாளில் நாகலட்சுமியின் மகள் அஸ்வினி மற்றும் புதுப்பெண் தேவி ஆகியோர் பஸ் நிலையம் அருகில் உள்ள துணி கடைக்கு செல்வதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறி விட்டு வந்துள்ளனர்.

கடைக்கு செல்வதற்கு முன்னர் புதுப்பெண் தேவி, கழிப்பறை சென்று விட்டு வருவதாக கூறி விட்டு சென்றவர், பின்னர் துணிக்கடைக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அஸ்வினி தனது தாய் நாகலட்சுமி மற்றும் புதுமாப்பிள்ளை விக்னேசுவரன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் பஸ் நிலையம் வந்து புதுப்பெண்ணை தேடினர்.

ஆனால் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்காதநிலையில் சிவகாசி டவுன் போலீசில் புகார் தெரிவித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான புதுப்பெண்ணை தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்