பொங்கல் பண்டிகை நாட்களில் 17 குழந்தைகள் பிறந்தன

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பொங்கல் பண்டிகை நாட்களில் 17 குழந்தைகள் பிறந்துள்ளன.

Update: 2023-01-17 19:00 GMT

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பொங்கல் பண்டிகை நாட்களில் 17 குழந்தைகள் பிறந்துள்ளன.

மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி

திருவாரூர் மாவட்ட கலெக்டா் அலுவலகம் பின்புறத்தில் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. இங்கு திருவாரூர் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள ஊர்களில் இருந்தும் மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா்.

அதன்படி தினமும் 100-க்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாகவும், ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அவசர சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் போன்றவை மேற்கொள்ளபட்டு வருகிறது.

17 குழந்தைகள்

இந்த மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தினமும் சுகப்பிரசவமாகவும், அறுவை சிகிச்சையின் மூலமும் ஏராளமான குழந்தைகள் பிறக்கின்றன. அதன்படி பொங்கல் பண்டிகை தினத்தன்று 10 குழந்தைகளும், மாட்டு பொங்கல் தினத்தன்று 7 குழந்தைகள் என மொத்தம் 17 குழந்தைகள் பிறந்துள்ளன என்று மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி டாக்டர்கள் தெரிவித்தனர். குழந்தைகளை பெற்றெடுத்த பெண்கள், பொங்கல் பரிசாக தங்களுக்கு குழந்தைகள் பிறந்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும் நண்பர்கள், உறவினர்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்

Tags:    

மேலும் செய்திகள்