36 மையங்களில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தொடக்கம்

நீடாமங்கலம் வட்டாரத்தில் 36 மையங்களில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தொடங்கி உள்ளது.

Update: 2023-09-02 18:45 GMT

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் வட்டாரத்தில் 36 மையங்களில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தொடங்கி உள்ளது.

புதிய பாரத எழுத்தறிவு திட்டம்

15 வயதுக்கு மேற்பட்ட எழுதப்படிக்க தெரியாதவர்களுக்கு பயிற்சி அளிக்க புதிய பாரத எழுத்தறிவு திட்டம் மத்திய, மாநில அரசுகள் மூலம் தொடங்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டாரத்தில் 36 மையங்களில் இந்த திட்டம் நேற்று தொடங்கியது. நீடாமங்கலம் அரசு உதவி பெறும் இலக்குமி விலாஸ் நடுநிலைப்பள்ளியில் நடந்த தொடக்க விழாவிற்கு வட்டார கல்வி அலுவலர் சம்பத் தலைமை தாங்கினார். அப்போது மையத்தில் கற்பவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு நூல்களை வழங்கினார். பல்நோக்கு சேவை இயக்க தலைவர் பத்மஸ்ரீராமன், துணைத்தலைவர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் தேவிலட்சுமி வரவேற்றார். ஆசிரியர் பயிற்றுனர் இளையராஜா, தன்னார்வலர் பிருந்தா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

எடக்கீழையூர்- வையகளத்தூர்

இதேபோல் எடக்கீழையூரில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட மையத்தை வட்டார கல்வி அலுவலர் முத்தமிழன் தொடங்கி வைத்தார். தேவங்குடியில் உதவி திட்ட அலுவலர் பாலசுப்பிரமணியன் மையத்தை தொடங்கி வைத்தார். இதில் ஆசிரியர் பயிற்றுனர் வேலுசாமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வையகளத்தூர் மையத்தை வட்டார வளமைய மேற்பார்வையாளர் சத்யா தொடங்கி வைத்தார். அப்போது ஆசிரியர் பயிற்றுனர் ராதிகா மற்றும் பலர் உடன் இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்