புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தொடக்கம்

திருமக்கோட்டை அருகே புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தொடக்கம்

Update: 2023-09-01 18:45 GMT

திருமக்கோட்டை:

15 வயதுக்கு மேற்பட்ட எழுதப்படிக்க தெரியாதவர்களுக்கு பயிற்சி அளிக்க புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் திருமக்கோட்டை அருகே உள்ள தென்பரை மேலக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தொடங்கி வைக்கப்பட்டது.

இதற்கான நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் இருளப்பன் தலைமை தாங்கினார். கோட்டூர் வட்டார கல்வி அலுவலர் செல்வம் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், ஆசிரியர் பயிற்றுனர் சக்திவேல், இல்லம் தேடி கல்வி வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் வைரமுத்து, ஆகியோர் கையேடுகளை வழங்கினர். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மனோகரன், வார்டு உறுப்பினர் ரகுநாதன், பள்ளி மேலாண்மை குழு தலைவி பிரியா, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கணபதி, கிராம கமிட்டி தலைவர் மகாலிங்கம், பொருளாளர் சுதாகர், ராதாகிருஷ்ணன், தன்னார்வலர் நித்தியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக தலைமை ஆசிரியர் ரஷ்யா பானு வரவேற்றார்.

முடிவில் ஆசிரியர் ரத்தினகுமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்