புதிய பாரத எழுத்தறிவு திட்ட வகுப்புகள் தொடக்கம்

புதிய பாரத எழுத்தறிவு திட்ட வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.

Update: 2023-09-03 19:15 GMT

குடவாசல் வட்டார கல்வி அலுவலகம் சார்பில் 15 வயதுக்கு மேற்பட்ட எழுத்தறிவு இல்லாதவர்களுக்கு கல்வி அளிப்பதற்கான புதிய பாரத எழுத்தறிவு திட்ட தொடக்க நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி அலுவலர் குமரேசன் தலைமை தாங்கி, வகுப்புகளை தொடங்கி வைத்தார். குடவாசல் நடுத்தெருவில் உள்ள ஒன்றிய நடுநிலைப்பள்ளி சார்பில் நடந்த வகுப்பில் 20 பேருக்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் பூபாலன், தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், தன்னார்வலர்கள் கண்மணி, ஜீவிதா ஆகியோர் எழுத்தறிவு தொடர்பான பாடங்களை நடத்தினர். அப்போது புத்தகங்கள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்