வீழிநாதர் கோவிலில் புதிய அன்னதான கூடம்
திருவீழிமிழலை வீழிநாதர் கோவிலில் புதிய அன்னதான கூடத்தை திருவாவடுதுறை ஆதீனம் திறந்து வைத்தார்.
குடவாசல்:
குடவாசல் அருகில் உள்ள திருவீழிமிழலை வீழிநாதர் கோவில் வளாகத்தில் நேற்று அன்னதான கூடம் மற்றும் தீர்த்தவாரி மண்டபம் ஆகியவை திறப்பு விழா நடந்தது.விழாவில் திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் கலந்து கொண்டு அன்னதான கூடம் மற்றும் தீர்த்தவாரி மண்டபம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.முன்னதாக சிவாச்சாரியார் யாகசாலை பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் செய்திருந்தார்