நேதாஜி சுபாஷ் சேனை ஆர்ப்பாட்டம்

நெல்லை வண்ணார்பேட்டையில் நேதாஜி சுபாஷ் சேனை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-07-16 19:40 GMT

நெல்லை கிழக்கு மாவட்ட நேதாஜி சுபாஷ் சேனை சார்பில் நெல்லை வண்ணார்பேட்டை பாலத்தின் கீழ் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சுபாஷ் சேனை தலைவர் வக்கீல் மகாராஜன் தலைமை தாங்கினார். நிர்வாகி சிவன் பாண்டியன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், நேதாஜி சுபாஷ் சேனை நிர்வாகி மீது பொய் வழக்கு கொடுத்த சார்பதிவாளர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் புரட்சி பாரதம் மாவட்ட செயலாளர் நெல்சன், மாவட்ட தலைவர் முகமது காசீம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்