நியோமேக்ஸ் விவகாரம்; பாதிக்கப்பட்டவர்களுக்கு மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்

கோர்ட்டு உத்தரவின்படி, பாதிக்கப்பட்டவர்களுக்காக மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.;

Update:2024-02-25 14:28 IST

மதுரை,

நியோமேக்ஸ் நிதி நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகார்களின் பேரின் அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நியோமேக்ஸ் மோசடியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பொருளாதார குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின்படி, வழக்கறிஞர் ஆணையர்கள் பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடினர். இதில் பாதிக்கப்பட்ட 1,404 பேரில் 220 பேர் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலீடு செய்த பணத்திற்கு ஈடாக நிலம் அல்லது பணம் வழங்குவது என சுமுக முடிவு எடுக்கப்பட்டது. 


Full View


Tags:    

மேலும் செய்திகள்