நெல்லையப்பர் கோவிலில் வசந்த உற்சவ விழா தொடங்கியது
நெல்லையப்பர் கோவிலில் வசந்த உற்சவ விழா நேற்று தொடங்கியது.;
நெல்லையப்பர் கோவிலில் வசந்த உற்சவ விழா நேற்று தொடங்கியது.
வசந்த உற்சவம்
நெல்லை டவுன் நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் அக்னி நட்சத்திர காலத்தில் 'வசந்த உற்சவ' திருவிழா நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று தொடங்கியது.
இதையொட்டி சுவாமி சன்னதிக்கும், அம்பாள் சன்னதிக்கும் இடையே உள்ள வசந்த மண்டபத்துக்கு சுவாமி-அம்பாள் சப்பரத்தில் வந்து எழுந்தருளினர். அங்கு சுவாமி-அம்பாள் எழுந்தருளிய கல்மண்டபத்தை சுற்றிலும் தண்ணீர் நிரப்பப்பட்டு இருந்தது.
சிறப்பு தீபாராதனை
சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. மேலும் கும்பம் வைத்து சிறப்பு ஹோமமும் நடைபெற்றது. கோடை காலத்துக்கு உகந்த வெள்ளரி, பானகரம் உள்ளிட்ட குளிர்ச்சி தரும் பழங்கள் உள்ளிட்டவை சுவாமி, அம்பாளுக்கு படைக்கப்பட்டு வழிபாடு நடந்தது. மாலையில் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழா வருகிற 16-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர்.