நெல்லையப்பர் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.;

Update:2023-09-27 00:59 IST

நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் உள்ள 21 நிரந்தர உண்டியல்கள் காணிக்கை கடந்த 15-ந் தேதி எண்ணப்பட்டன. ரிசர்வ் வங்கியினால் ரூ.2 ஆயிரம் நோட்டை பொதுமக்கள் புழக்கத்தில் இருந்து திரும்ப பெறுவதாகவும், மக்கள் வைத்துள்ள ரூ.2 ஆயிரம் நோட்டை வருகிற 30.9.2023-க்குள் வங்கியில் செலுத்துமாறும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி நெல்லையப்பர் கோவிலில் உள்ள 21 நிரந்தர உண்டியல்கள் மற்றும் சுற்று கோவில்களில் உள்ள 6 உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணத்தை எண்ணும் பணி நேற்று நடந்தது.

இந்து சமய அறநிலையத்துறை நெல்லை மேற்கு பிரிவு ஆய்வர் தனலட்சுமி என்ற வள்ளி, கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி, கண்காணிப்பாளர் சுப்புலட்சுமி மற்றும் கோவில் பணியாளர்கள் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது.

இதில் கோவிலில் உள்ள 21 நிரந்தர உண்டியல்களில் ரூ.1 லட்சத்து 71 ஆயிரத்து 982 மற்றும், சுற்று கோவிலில் உள்ள 6 உண்டியல்களில் ரூ.1 லட்சத்து 765 மற்றும் வெளிநாட்டு பணம் ஆகியவை இருந்தது. இதில் ரூ.2 ஆயிரம் நோட்டு எதுவும் இல்லை. காணிக்கை பணத்தை எண்ணும் பணியில் நெல்லை சந்திப்பு ம.தி.தா இந்து மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் சொக்கலிங்கம், சோமசுந்தரம் ஆகியோர் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்