நெல்லை மண்டல புதிய தலைமை மின்பொறியாளர் பொறுப்பேற்பு
நெல்லை மண்டல புதிய தலைமை மின்பொறியாளராக குப்புராணி பொறுப்பேற்றுக் கொண்டார்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மண்டல அலுவலகத்திற்கு உட்பட்ட நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டத்தை உள்ளடக்கிய நெல்லை மண்டல தலைமை மின்பொறியாளராக குப்புராணி நேற்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவரிடம் மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி பொறுப்புகளை ஒப்படைத்தார். நிகழ்ச்சியில் மின்பகிர்மான வட்ட மின்பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டு புதிய தலைமை மின்பொறியாளருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.