நெல்லை ரெயில்கள் புறப்படும் நேரம் மாற்றம்

கேரளா வழியாக இயக்கப்படும் நெல்லை ரெயில்கள் புறப்படும் நேரம் மாற்றப்பட்டு உள்ளது.

Update: 2023-06-06 20:24 GMT

கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை காலமாக இருப்பதால் வருகிற 10-ந்தேதி (சனிக்கிழமை) ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. இதையொட்டி கேரளா வழியாக இயக்கப்படும் நெல்லை ரெயில்களின் புறப்படும் நேரம் மாற்றப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக திருவனந்தபுரம் கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் செபி டி.ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

நெல்லை-காந்திதாம் (வண்டி எண் 20923) வாராந்திர ஹிம்சாபர் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் வியாழக்கிழமை தோறும் காலை 8 மணிக்கு புறப்பட்டு சென்றது. இனிமேல் 2.45 மணி நேரம் முன்னதாக அதாவது அதிகாலை 5.15 மணிக்கு இந்த ரெயில் புறப்படும்.

நெல்லை-ஜாம்நகர் ரெயில் (வண்டி எண் 19577) திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் காலை 8 மணிக்கு புறப்படும். இனிமேல் இந்த ரெயில் அதிகாலை 5.15 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும். ஜாம்நகருக்கு மறுநாள் காலை 4.25 மணிக்கு சென்றடையும்.

மறுமார்க்கத்தில் ஜாம்நகர்-நெல்லை ரெயில் (வண்டி எண் 19578) வெள்ளி, சனிக்கிழமைகளில் ஜாம்நகரில் இரவு 9.20 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் நெல்லைக்கு மறுநாள் மாலை 6.20 மணிக்கு வருவதற்கு பதிலாக இரவு 10.05 மணிக்கு வந்து சேரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்