நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டகிராம கோவில் பூசாரிகள் பேரவை ஆலோசனை கூட்டம்

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட கிராம கோவில் பூசாரிகள் பேரவை ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2023-08-29 18:45 GMT

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட கிராம கோவில் பூசாரிகள் பேரவை ஆலோசனை கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது. மாநில அமைப்பாளர் சோமசுந்தரம் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். இந்த கூட்டத்தில் கோவில்பட்டியில் மாநாடு அக்டோபர் மாதம் கடைசியில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதில் விசுவ இந்து பரிஷத் மாவட்ட தலைவர்கள் கணேசன் (நெல்லை), சுப்பையா (தூத்துக்குடி), பூசாரிகள் பேரவை மாவட்ட அமைப்பாளர்கள் மாடசாமி (நெல்லை), சரவணன் (தூத்துக்குடி), ஆவுடைநாயகன் (தென்காசி), இணை அமைப்பாளர்கள் வரதராஜன், சுடலைமணி, கோட்ட அமைப்பாளர் ரங்கநாதன், கோவில்பட்டி ஒன்றிய அமைப்பாளர் மூக்கையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்