நெல்லை மாவட்ட புதிய வருவாய் அலுவலர் பொறுப்பேற்பு
நெல்லை மாவட்ட புதிய வருவாய் அலுவலராக செந்தில்குமார் பொறுப்பேற்றுக் கொண்டார்.
நெல்லை மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்த ஜெயஸ்ரீ செல்லையா பணி மாறுதல் பெற்று சென்னைக்கு சென்றார். இதனையடுத்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் பொது மேலாளராக பணியாற்றி வந்த செந்தில்குமார் நெல்லை மாவட்ட புதிய வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.