நேரு நினைவு தினம் அனுசரிப்பு

தூத்துக்குடியில் நேரு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

Update: 2023-05-27 18:45 GMT

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 59-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நேற்று தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் மாவட்ட தலைவர் சி.எஸ். முரளிதரன் தலைமையில் நேருவின் உருவ படத்திற்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் மண்டல தலைவர் சேகர், வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல், மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர்கள் விஜயராஜ், ரஞ்சிதம் ஜெபராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்