செவிலியர்களுக்கு பணி நிரந்திரம் செய்ய வாய்ப்பில்லை; அமைச்சர் மா.சுப்பிரமணியன்
ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்க்கப்பட்ட செவிலியர்களுக்கு பணி நிரந்திரம் செய்ய வாய்ப்பில்லை என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.;
சென்னை,
ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செவிலியர்களை சந்தித்து பேச்சுவர்த்தை நடத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது:
ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்க்கப்பட்ட செவிலியர்களுக்கு பணி நிரந்திரம் செய்ய வாய்ப்பில்லை. மீண்டும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்" என்று அறிவித்தார். இந்நிலையில், அமைச்சருடன் சுமார் 2 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், போராட்டம் தொடரும் என்று செவிலியர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.