துணை தலைவர், கவுன்சிலர்கள் புறக்கணிப்பு

கிராம சபை கூட்டத்தை துணை தலைவர், கவுன்சிலர்கள் புறக்கணித்தனர்.;

Update: 2022-11-01 18:45 GMT

எஸ்.புதூர், 

எஸ்.புதூர் அருகே உள்ள பிரான்பட்டி ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் ஜெயலெட்சுமி தலைமை தாங்கினார். இந்த நிலையில் ஊராட்சியில் நடைபெறும் வரவு-செலவு குறித்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கவில்லை எனக்கூறி ஊராட்சி துணை தலைவர் பெருமாள், அவருடன் சேர்ந்து 4 வார்டு கவுன்சிலர்களும் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்ததாக கூறப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்