7 மையங்களில் நாளை 'நீட்' தேர்வு
மாவட்டத்தில் 7 மையங்களில் நாளை ‘நீட்’ தேர்வு நடைபெறுகிறது. இதில், 3,351 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர்.
மருத்துவப்படிப்புக்கு நுழைவுத்தேர்வான 'நீட்' நாடு முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் வல்லாத்திராக்கோட்டையில் உள்ள எம்.என்.எஸ்.கே. என்ஜினீயரிங் கல்லூரி, புதுக்கோட்டை அருகே சிவபுரத்தில் உள்ள எம்.ஆர்.எம். இன்டர்நேஷனல் பள்ளி, அறந்தாங்கி லாரல் மேல்நிலைப்பள்ளி, லேனாவிளக்கு மவுன்ட் சீயோன் இன்டர்நேஷனல் பள்ளி, அறந்தாங்கி கோவில்வயலில் சேக் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அறந்தாங்கி சாய் லாரல் இன்டர்நேஷனல் பள்ளி, டாக்டர்ஸ் பப்ளிக் பள்ளி ஆகிய 7 இடங்களில் 'நீட்' தேர்வு நடைபெற உள்ளது. மொத்தம் 3,351 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர்.