கரூர் மாவட்டத்தில் 2 மையங்களில் இன்று நீட் தேர்வு

கரூர் மாவட்டத்தில் நீட் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2 மையங்களில் நடக்கிறது.

Update: 2023-05-06 18:42 GMT

நீட் தேர்வு

மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு இன்று மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு நாடு முழுவதும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இந்த தேர்வுக்காக தமிழகத்தில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் மாணவி, மாணவிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். நீட் தேர்வு ஆங்கிலம், இந்தி, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், தமிழ் உள்பட 13 மொழிகளில் நடத்தப்படுகிறது. நீட் தேர்விற்கான ஹால்டிக்கெட்டுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இதை விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

முன்னேற்பாடு பணிகள்

இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் நீட் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெண்ணைமலை கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் காக்காவாடி வேலம்மாள் வித்யாலயா சீனியர் செகண்ட்ரி பள்ளி ஆகிய 2 மையங்களில் நடக்கிறது.

இதில் மொத்தம் 1,789 மாணவ, மாணவிகள் தேர்வுகள் எழுத உள்ளனர். இதனையொட்டி நீட் தேர்வு நடைபெறும் 2 மையங்களிலும் கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணி, குடிநீர் வசதி, வகுப்பறை மேஜைகளில் தேர்வு எண்கள் ஒட்டும் பணி உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடைபெற்றன.

Tags:    

மேலும் செய்திகள்