10,488 பேர் 'நீட்' தேர்வு எழுதுகிறார்கள்

சேலம் மாவட்டத்தில் 17 மையங்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் நீட் தேர்வை 10 ஆயிரத்து 488 பேர் எழுதுகின்றனர்.

Update: 2023-05-05 20:50 GMT

சேலம் மாவட்டத்தில் 17 மையங்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் நீட் தேர்வை 10 ஆயிரத்து 488 பேர் எழுதுகின்றனர்.

நீட் தேர்வு

நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான 'நீட்' நுழைவு தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் 10 ஆயிரத்து 488 மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதுகின்றனர். இதற்காக மாவட்டம் முழுவதும் 17 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதாவது, அம்மாபேட்டை சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி, சின்னதிருப்பதி ஜெய்ராம் பப்ளிக் பள்ளி, மெய்யனூர் வித்யா மந்திர் பள்ளி, ஜாகீர் அம்மாபாளையம் செந்தில் பப்ளிக் பள்ளி உள்பட 17 மையங்களில் 'நீட்' தேர்வு நடைபெறுகிறது.

சிறப்பு பஸ்கள்

இந்த மையங்களில் மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நீட் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. எனவே நீட் தேர்வு எழுதுபவர்கள் அதற்குரிய இணையதளத்துக்கு சென்று தங்களுடைய விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வு மையங்களுக்கு மாணவ, மாணவிகள் செல்வதற்காக சேலம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 70-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. நீட் தேர்வு எந்த மையங்களில் நடைபெறுகிறதோ? அந்த பகுதிகளுக்கு அதிகாலை முதலே சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ஒவ்வொரு மையத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு போடவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்