மாற்றுத்திறனாளிகள் தேவை கண்டறிதல் முகாம்

சீர்காழியில் மாற்றுத்திறனாளிகள் தேவை கண்டறிதல் முகாம் நடந்தது

Update: 2023-04-12 18:45 GMT

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி வழிகாட்டுதலின்படி மாற்றத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றவர்களுக்கான தேவைகள் கண்டறிதல் முகாம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நடந்தது. முகாமில் ஆணையர் இளங்கோவன் மற்றும் உதவித்திட்ட அலுவலர்கள் குணசேகரன், மனுநீதி சோழன் ஆகியோர் கலந்துகொண்டு மாற்றத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றவர்களிடம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டனர். இந்த விண்ணப்பங்கள் தொடர்பாக வருகின்ற நாட்களில் தொலைபேசி மூலம் விசாரணை மேற்கொண்டு அந்தந்த துறைகளுக்கு அனுப்பபட்டு துறை ரீதியான தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்